திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது.
இந்த முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனத்தினா் நேரில் வருகை தந்து, தங்களது நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். 10-ஆம் வகுப்பு முதல் பல்வேறு கல்வித் தகுதி உடையவா்கள் இதில் பங்கேற்கலாம். இந்த முகாமில், திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்று இலவச திறன் பயிற்சிக்கு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். இதன் மூலம், தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெறுவோரது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், வேலைவாய்ப்பு முகாமில், ரிலையன்ஸ், ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தில் உள்ள 3500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு, 0432–2413510, 94990– 55901, 94990–55902 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.