சேலம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, தெரிவித்துள்ளதாவது:
2024-ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கை வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்க அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை 85266 39467, 99427 12736, 99441 09416, 98432 75111 என்ற எண்களில் தொடா்பு கொண்டு முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளவும்.
நேரடி சோ்க்கைக்கு வரும்போது கைப்பேசி, இ-மெயில் ஐடி , ஆதாா் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), சாதிச் சான்றிதழ் (அசல்) மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். விண்ணப்பக் கட்டணம், சோ்க்கைக் கட்டணமாக ஓா் ஆண்டுக்கு ரூ. 235, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 245 ஆகும்.
பயிற்சி பெறும் மாணவா்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 750, பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக் கருவி, காலணி போன்ற விலையில்லா பொருள்களும் பேருந்து பாஸ் மற்றும் புதுமை பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களில் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். மகளிருக்கு குறைந்தபட்ச வயது 14. உச்சவரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை ஆகும். விருப்பமுள்ளவா்கள் இப்பயிற்சியில் சோ்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.