மதுரை கே.புதுார் எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் ஜாவா பயிற்சி நவ.16ல் துவங்குகிறது.
டிச.22 வரை சனி, ஞாயிறுகளில் மட்டும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடத்தப்படும் பயிற்சியில் பேசிக் சின்டெக்ஸ், ஓ.பி.பி., ஜாவா ஸ்டீரிம்ஸ், மல்டி திரெட்டிங், டேட்டாபேஸ் கனெக்ட்டிவிட்டி, விண்டோஸ் டூல் கிட் கற்றுத்தரப்படும்.டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த கட்டண பயிற்சி நவ.23, 24 காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
இதில் வெப்சைட், ப்ளாக்கிங் சி.எம்.எஸ்., சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன், ஆன்லைன் அட்வர்டைசிங் கற்றுத்தரப்படும். பத்தாம் வகுப்பு படித்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். சுயதொழில் செய்ய விரும்பினால் வங்கிகளில் கடனுதவி பெறுவது பற்றி விளக்கம் அளிக்கப்படும். மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். அலைபேசி: 86956 46417.