TAMIL MIXER EDUCATION-ன்
விளையாட்டு
செய்திகள்
காஞ்சிபுரத்தில் முதல்வா்
கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருகிற
15,16 ஆகிய இரு தேதிகளில்
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
நடைபெறவுள்ளன.
கபடி,
தடகளம், வாலிபால், கால்பந்து,
கூடைப்பந்து போட்டிகள் ஜூலை
15ம் தேதியும், நீச்சல்,
பூப்பந்து, பளுதூக்குதல், டென்னிஸ்,
ஹாக்கி போட்டிகள் ஜூலை
16ம் தேதியும் நடைபெறுகின்றன.
போட்டிகளில் 25 வயதுக்குட்பட்டவா்களாக இருப்பதுடன், இதற்கான சான்றிதழுடன் பங்கேற்க
அனுமதிக்கப்படுவா். ஆதார்
அட்டை நகல் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
ஆண்,
பெண் இருபாலருக்கும் தனித்
தனியாக தடகளப் போட்டிகள்,
நீச்சல் போட்டி, பளுதூக்கும் போட்டி நடத்தப்படும். தனி
நபா், குழு போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறும்
அணி வீரா், வீராங்கனைகளுக்கு தலா ரூ.1,000,
ரூ.750, ரூ.500 பரிசுத்
தொகை வழங்கப்படும்.
மாநில
அளவிலான முதல்வா் கோப்பைக்கான தனி நபா், குழு
போட்டியில் முதல் 3 இடங்களைப்
பெறுபவா்களுக்கு ரூ.1
லட்சம், ரூ.75,000, ரூ.50,000
பரிசுத் தொகை,விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்படும். போட்டியாளா்கள் தங்களது பெயரில் உள்ள
வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகலும்
எடுத்து கொண்டு வர
வேண்டும்.
தடகளம்,
நீச்சல், பளு தூக்குதல்
போட்டிகளில் கலந்து கொள்பவா்கள் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்கலாம். போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவரும்
இணையதள முகவரியான இணையம்
மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட
விளையாட்டு அலுவலா், அண்ணா
மாவட்ட விளையாட்டு அரங்கம்,
காஞ்சிபுரம் என்ற முகவரியிலோ அல்லது 74017 03481 மற்றும் 044 27222628
ஆகிய தொலைபேசி எண்களிலோ
தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here