தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு முக்கிய
அறிவுறுத்தல் – இயக்குனர்
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம்
அலை அதிக வேகத்தில்
பரவி வருகிறது. ஒரு
நாளில் மட்டும் தொற்று
பதித்தவர்கள் எண்ணிக்கை
30,000 க்கும் அதிகமாக சென்று
கொண்டிருக்கிறது. இதனால்
தமிழகம் முழுவதும் தீவிர
கட்டுப்பாடுகளுடன் கூடிய
முழு ஊரடங்கு அமலில்
இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்
அவர்கள் கல்வித்துறை பணியாளர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்:
மதிப்புமிகு அனைத்து CEO.,க்கள், மாவட்ட
கல்வி அலுவலர்கள், அனைத்து
வகை பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள், அனைத்து
நிலை ஆசிரியர்கள், வட்டாரக்
கல்வி அலுவலர்கள், SSA & RMSA திட்டத்தில் பணியாற்றும் அனைத்து நிலை
அலுவலர்கள் மற்றும் அலுவலகப்
பணியாளர்கள் அனைவரும் கொரோனா
தொற்றின் இரண்டாம் அலை
காரணமாக அரசின் அனைத்து
பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி
மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
யாருக்கேனும் கொரோனா தொற்றின் ஆரம்ப
அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக
அரசு மருத்துவமனைக்கு சென்று
தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று
கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும்,
அதில் தங்களின் உயிர்
மிகவும் விலை மதிப்பற்றதாகும். தங்களை நம்பி குடும்பம்,
குழந்தைகள் உள்ளது என்பதை
உணர்ந்து அனைவரும் கவனமாக
இருக்க கேட்டுக் கொள்வதாக
தெரிவித்துள்ளார்.