இலவச பயிற்சி
அளிப்பதாக சொன்னால், உடனே
இதை கட்டாயம் சரிபார்க்க வேண்டும் – மத்திய கல்வி
அமைச்சகம்
கல்வி
நிறுவனங்களை தேர்வு செய்வதில்
பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும்
அனைத்து தரப்பினரும் மிகவும்
கவனமுடன் இருக்க வேண்டும்
மத்திய கல்வி அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப தாக்கம்
காரணமாக, கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பல
வகையான படிப்புகளையும், டியூசன்களையும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் வழங்குகின்றன.
இந்த
கல்வி நிறுவனங்களை தேர்வு
செய்வதில் பெற்றோர்கள், மாணவர்கள்
மற்றும் அனைத்து தரப்பினரும் மிகவும் கவனமுடன் இருக்க
வேண்டும். இலவச பயிற்சிகளை அளிப்பதாக கூறும் கல்வி
நிறுவனங்கள் பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சில
கல்வி நிறுவனங்கள் இலவச
பயிற்சிகளை அளிப்பதாக பெற்றோர்களை கவர்ந்து, பதிவு செய்வதற்கு எலக்ட்ரானிக் பண
பரிமாற்ற முறையை கட்டாயமாக்கி, தானாக பணம் எடுக்கும்
வசதியில் இணைந்து விடுகின்றனர்.
கல்வி நிறுவனங்களிடம் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை:
செய்ய
வேண்டியவை:
கட்டணம்
செலுத்த தானாக பணம்
எடுத்துக் கொள்ளும் வசதியை
தவிர்க்க வேண்டும். சில
கல்வி நிறுவனங்கள் முதலில்
சில சேவைகளை இலவசமாக
அளிப்பது போல் தெரியலாம்,
ஆனால் தொடர்ந்து படிக்கும்
போது, மாணவர்கள் கட்டணம்
செலுத்தும் முறைக்கும் செல்ல
வேண்டியிருக்கும்.
தானியங்கி
முறையில் பணம் எடுக்கும்
முறைக்கு தேர்வு செய்திருந்தால், குழந்தைகள் தங்களை அறியாமலேயே கட்டண பாடங்களுக்குள் சென்று,
வங்கி கணக்கில் இருந்து
பணத்தை இழக்க வேண்டியிருக்கும். கல்வி நிறுவனங்களின் சேவைகளை பெறும் முன்,
அதன் விதிமுறைகள் மற்றும்
நிபந்தனைகளை கவனமுடன் படிக்க
வேண்டும். அந்த கல்வி
நிறுவனங்களின் மென்பொருட்கள் உங்களின் ஐ.பி.
முகவரி மற்றும் தனிப்பட்ட
தரவுகளை கண்காணிக்கலாம்.
கல்விக்கான செயலிகள், பாடங்கள் அடங்கிய
பென் டிரைவ் மற்றும்
இதர சாதனங்கள் வாங்கும்
போது, அதற்கான வரி
ரசீதை கேட்டு பெற
வேண்டும். கல்வி தொழில்நுட்ப நிறவனங்களை தேர்வு செய்யும்
முன் அதன் பின்னணியை
சரிபார்க்க வேண்டும். கல்வி
– தொழில்நுட்ப தளங்களை பயன்படுத்தும் முன், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, மத்திய கல்வி
அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/pragyata-guidelines_0.pdf
என்ற இணைப்பில் பார்க்கலாம்
செய்யக் கூடாதவை:
கல்வி
தொழில்நுட்ப நிறுவனங்களின் விளம்பரங்களை கண்மூடித்தனமாக நம்ப
கூடாது. உங்களுக்கு தெரியாத
எந்த கடன் ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட வேண்டாம்.
கல்வி– தொழில்நுட்ப தளங்களின்
நம்பகத்தன்மையை சரிபார்க்காமல், அவற்றின் செயலிகளை வைத்துக்
கொள்ள வேண்டாம். செயலிகள்
மூலம் கட்டணம் செலுத்த,
கிரெடிட் கார்டு, டெபிட்
கார்டு எண்களை பதிவு
செய்வதை தவிர்க்கவும். பொய்
வாக்குறுதிகள் காரணமாக,
சரிபார்க்காத பாடப்பிரிவுகளில் சேர வேண்டாம்.
கல்வி தொழில் நுட்ப
நிறுவனங்களின் வெற்றி
பற்றிய தகவல்களை, முறையாக
சரிபார்க்காமல் நம்ப
வேண்டாம்.
பெற்றோர்
சம்மதம் இல்லாமல்,மாணவர்கள்
எதையும் வாங்க, அனுமதிக்க
வேண்டாம். ரிசர்வ் வங்கி
விதிமுறைகள்படி ஒரு
முறை கடவுச் சொல்(ஒடிபி)
அடிப்படையிலான பணம்
செலுத்தும் முறையை எப்போதும்
பின்பற்ற வேண்டும். வங்கி
கணக்கு விவரங்கள், ஒடிபி
எண் ஆகியவற்றை விற்பனை
பிரதிநிதிகளுடன் பகிர்ந்து
கொள்ள வேண்டாம். ஆன்லைன்
மூலம் மோசடியில் ஈடுபடுபவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.
மின்னணு பாடங்களை இலவசமாக பெற மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ்கண்ட இணையதளங்களை பார்க்கவும்:
SWAYAM
PRABHA TV Channels for class 1 to 12- https://www.swayamprabha.gov.in/index.php/schooledu