போட்டித் தோவுகளுக்கு இலவசப் பயிற்சி பெற
தொடா்பு கொள்ளலாம் – வேலூா்
போட்டித்
தோவுகளுக்கு இலவசப் பயிற்சி
பெற விரும்புவோர் வேலூா்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா்
மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்படும் தன்னார்வப் பயிலும்
வட்டம் சார்பில் மத்திய,
மாநில அரசு போட்டித்
தேர்வுகளுக்கான இலவசப்
பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது
தமிழ்நாடு அரசுப் பணியாளா்
தோவாணையம் 5,413 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்
2 தோவு அறிவித்துள்ள நிலையில்,
அதற்கான போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் தினமும்
காலை 10 மணி முதல்
4 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.
இதில்,
160 மாணவ, மாணவிகள் பயின்று
வருகின்றனா்.
மேலும்,
தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் இயங்கும் நூலகத்தில் போட்டித் தோவுகள் தொடா்பாக
4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
நூல்கள் மாணவா்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
போட்டித்
தேர்வு எழுதும் போட்டியாளா்கள் இந்த அலுவலகத்தை தொடா்பு
கொண்டு, தங்களது பெயரை
பதிவு செய்து, இலவச
பயிற்சி வகுப்பில் பங்கேற்று
பயன்பெறலாம்.