பிப்ரவரி 18, 19ம்
தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை
– பள்ளிக்கல்வி துறை
அறிவிப்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே
கட்டமாக வருகின்ற பிப்ரவரி
19ம் தேதி நடைபெறும்
எனவும் தேர்தலுக்கான வாக்கு
எண்ணிக்கை பிப்ரவரி 22ம்
தேதி நடைபெற உள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.
இந்த
அறிவிப்பு குடியரசு தினத்தன்று வெளியானது. உள்ளாட்சித் தேர்தல்
தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு
மனு தாக்கல் நிறைவடைந்ததிலிருந்து அரசியல் கட்சிகள்
மற்றும் வேட்பாளர்கள் தீவிர
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் என்பதால்
ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர்.
தேர்தல்
பிரச்சாரத்தின்போது தோசை
சுடுவது, டீ போடுவது,
துணி துவைப்பது என்று
வேட்பாளர்களும் அரசியல்
கட்சிகளும் விதவிதமான முறையில்
வாக்கு சேகரித்துவருகின்றனர்.
இந்தநிலையில், வாக்குப் பதிவு நாளான
பிப்ரவரி 19ம் தேதி
பள்ளிகளுக்கு விடுமுறை
என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்த பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பில்:
வரும்
19.02.2022 அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை
அளிக்கப்படுகிறது. 50% மேல்
தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அப்பள்ளிகளுக்கு 18.02.2022 அன்றும்
விடுமுறை அளிக்கப்படுகிறது.