HomeBlogமே 1 ஆம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் –...

மே 1 ஆம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – கல்வித்துறை

மே 1 ஆம்
தேதி முதல் அரசு
பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு
வர வேண்டாம்கல்வித்துறை

தமிழகம்
முழுவதும் கொரோனா நோய்த்தொற்று கடந்த சில வாரங்களாக
அதிகமாக பரவி வருகிறது.
இதனால் முதற்கட்ட கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளி
மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

1 முதல்
11
ஆம் வகுப்பு வரை
மாணவர்களுக்கு தேர்வுகள்
நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட
உள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது. 12 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்
தேர்வுகள் மே மாதம்
நடைபெறுவதாக இருந்தது.

ஆனால்
கொரோனா மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அதிகமாக பரவி வரும்
காரணத்தினால் தேர்வுகள்
ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் அந்த
மாணவர்களுக்கு செய்முறை
தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெற்றது. அவர்களுக்கு ஏப்ரல்
மாதம் 24 ஆம் தேதி
முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல்
இருந்தாலும் ஆசிரியர்கள் கட்டாயம்
பள்ளிக்கு வர வேண்டும்
என அறிவுறுத்தப்பட்டது. ஆனால்
கொரோனா இரண்டாம் அலை
தாக்கம் காரணமாக பல்வேறு
ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்
என கோரிக்கை வைக்கப்பட்டது.

பல
ஆசிரியர்களுக்கு இணைநோய்
உள்ளதால் இந்த பேரிடர்
காலத்தில் பயணம் செய்து
பள்ளிக்கு வருவதால் கொரோனா
தொற்று ஏற்படுகிறது. எனவே
பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட
வேண்டும் என கோரிக்கை
வைக்கப்பட்டது. இந்நிலையில் மே 1 ஆம் தேதி
முதல் அரசு பள்ளி
ஆசிரியர்கள் பள்ளிக்கு வர
வேண்டாம் என பள்ளிக்
கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மே
மாதம் கடைசி வாரத்தில்
மாணவர் சேர்க்கை உள்ளிட்ட
பள்ளிகள் நடைபெறும் என்பதால்
அப்போது மட்டும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.
அது குறித்து அறிவிப்பு
பின்னர் வெளியிடப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular