புதிய தேசிய
கல்விக்கொள்கை 2021 – தமிழ்
மொழி புறக்கணிப்பு
இந்தியாவில் முன்னதாக கடந்த 1986ம்
ஆண்டு வகுக்கப்பட்ட கல்விக்கொள்கை சுமார் 34 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில் நாட்டில் கல்வி தரத்தினை
உயர்த்த மத்திய அரசு
திட்டமிட்டது. இதற்காக
கடந்த ஆண்டு 21ம்
நூற்றாண்டின் முதல்
புதிய கல்வி கொள்கையை
அறிவித்தது. மத்திய அரசு
அறிவித்த இந்த கல்வி
கொள்கைக்கு மத்திய அமைச்சரவை
ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த
திட்டம் மூலம் நாட்டில்
கல்வி வளர்ச்சியில் பெரிய
மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேற்ற
பாதைக்கு வழிவகுக்கும் என்று
தெரிவிக்கப்பட்டது. மத்திய
அரசு அறிவித்த புதிய
கல்விக்கொள்கை கொரோனா
நோய் பரவல் காரணமாக
காலதாமதம் ஏற்படாமல் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த
வகையில் தற்போது அசாமி,
பெங்காலி, குஜராத்தி, கன்னடம்
உள்ளிட்ட 17 மொழிகளில் புதிய
தேசிய கல்விக்கொள்கை மொழி
மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதில்
தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய
கொள்கையில் அனைத்து மாநில
மொழிகளில் மொழி பெயர்த்து
மத்திய அரசு வெளியிட்ட
நிலையில் தற்போது இதில்
தமிழ் மொழி மட்டும்
புறக்கணிக்கப்பட்டுள்ளது.