TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகள் அதிகரிப்பால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதற்கு உடனடியாக தயாராக வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மருத்துவ அலுவலர்கள் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள, தகுதி உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் கல்வித்தகுதி உள்ளிட்ட அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக வரலாம். வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது. இதற்காக சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பொது சுகாதாரத்துறையின் சென்னை மாநகர நல சங்க அலுவலகத்திற்கு வர வேண்டும்.
1 – மருத்துவ அலுவலர்கள் – 150 பேர் தேவை (அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படித்திருக்க வேண்டும் – மாத சம்பளம் ரூ.60,000)
2 – செவிலியர் – 150 பேர் தேவை (அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் DGNM படித்திருக்க வேண்டும் – மாத சம்பளம் ரூ.15,000)
மேற்குறிப்பிட்ட இரண்டு பணிகளும் முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. இந்தப் பணிகளில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


