TNPSC தேர்வுகளுக்கு அரசின்
இலவச ஆன்லைன் பயிற்சி
அரசாங்க
வேலைக்குச் செல்ல வேண்டும்
என்பது பெரும்பாலானவர்களின் கனவாக
இருக்கும். அந்த வகையில்
2022ம் ஆண்டு நடத்தப்பட
இருக்கும் அரசு போட்டித்
தேர்வுக்களுக்கான அட்டவணையை
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் கடந்த மாதம்
வெளியிட்டது.
அதில்,
பிப்ரவரி மாதம் குரூப்
– 2 தேர்வுக்கான அறிவிப்பும், மார்ச்
மாதம் குரூப் – 4 தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்படும் என்று
என்று சொல்லப்பட்டது.
கொரோனா
பேரிடர் காரணமாக கடந்த
இரண்டு ஆண்டுகளாக போட்டித்
தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், பத்தாயிரத்திற்கும் அதிகமான
காலிப் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்புகள், தேர்வுக்குத் தயார் செய்பவர்களின் மத்தியில்
பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.ஆன்லைனில் சாதிச் சான்றிதழ்
பெற விண்ணப்பிப்பது எப்படி?
அரசு
போட்டித்தேர்வுகளுக்குத் தயார்
செய்பவர்கள், பொதுவாக பயிற்சி
வகுப்புகளுக்குச் செல்வார்கள். போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் அனைவருக்கும் இலவசமாகக்
கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் இலவச
வேலைவாய்ப்பு பயிற்சி
வகுப்புகளை அரசு நடத்தி
வந்தது.
தேர்வுகள்
நெருங்கும் சூழலில், கொரோனா
பரவலும் அதிகரித்துள்ளது. இலவச
பயிற்சி வகுப்புகள் இனி
சாத்தியமா என்ற கேள்வி
தேர்வுக்குத் தயார்
செய்பவர்களின் மத்தியில்
எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஆன்லைன்
மூலம் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் எல்லா மாவட்டங்களிலும், வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தின் சார்பாக
நடத்தப்படும் என்ற
அறிவிப்பை தமிழக அரசு
வெளியிட்டது.
தேர்விற்குத் தயார் செய்பவர்களுக்காக `Virtual Learning
Portal’ என்ற இணைய பக்கத்தை
அரசு உருவாக்கியுள்ளது. இதில்
போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள், ஆன்லைன்
வகுப்புகள் தொடர்பான தகவல்கள்,
புத்தகங்கள் போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன
தமிழக அரசின் இந்த இலவச இணைய பக்கத்தைப் பார்வையிடவும், ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைவதற்குமான வழிமுறைகள்:
முதலில்
https://tamilnaducareerservices.tn.gov.in/Registration/vle_candidate_register
என்ற லிங்க்கை க்ளிக்
செய்யவும். இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள `பதிவு‘
என்பதைத் தேர்வு செய்யவும்.
அடுத்தபடியாக உங்கள்
பெயர், கல்வித்தகுதி, ஆதார்
எண், ஊர், தொலைபேசி
எண் போன்று அதில்
கேட்கப்பட்டுள்ள அடிப்படைத் தகவல்களை உள்ளீடு செய்து,
உங்களுக்கான ஐடியை உருவாக்கிக்கொள்ளவும்.ஆன்லைனில் வருமானச்
சான்றிதழ் பெறுவது எப்படி?
பின்,
உங்கள் மாவட்டத்தில் உள்ள
வேலை வாய்ப்பு பதிவு
அலுவலகத்தைத் தொடர்பு
கொண்டால், இலவச ஆன்லைன்
பயிற்சிக்கான இணைய
குழுவில் (வாட்ஸ்அப் அல்லது
டெலிகிராம் குழுவில் ) உங்களை
இணைத்து விடுவார்கள். தினமும்
காலை ஆன்லைன் பயிற்சி
வகுப்புக்கான லிங்க்குகள் அனுப்பி வைக்கப்பட்டு, காலை
10 மணி முதல் 12 மணி
வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
ஏற்கெனவே
அரசு போட்டித்தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள் மூலமாக பயிற்சி
வகுப்புகள் நடத்தப்படுவதால் தேர்வுக்குத் தயார் செய்பவர்களுக்கு பயிற்சிகள் எளிதாக இருக்கும். மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.