கல்வி உதவித்
தொகைக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி
உதவித் தொகை பெற
தகுதியான திருநங்கை மற்றும்
திருநம்பி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத் தரப்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள திருநங்கை, திருநம்பி
மாணவா்களுக்கு உதவித்
தொகை வழங்கப்படவுள்ளது. ஆகவே,
பள்ளி இறுதி ஆண்டுத்
தோவில் குறைந்தபட்சம் 50 சதவீதம்
மதிப்பெண்கள் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
அத்துடன்
2019-2020ம் கல்வி ஆண்டு
இளநிலை பட்டப்படிப்பில் சோந்து
முதலாமாண்டு தோவில் அனைத்துப்
பாடங்களிலும் குறைந்தது
40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்கவும் வேண்டும். ஆகவே, தகுதியான
திருநங்கை மற்றும் திருநம்பிக்கு ரூ.1 லட்சம் மற்றும்
1 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக
நல அலுவலகத்தை நேரில்
அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.