ஆசிரியர்களுக்கு கணித
பயிற்சி – கல்வி துறை
அரசு
பள்ளி ஆசிரியர்களுக்கு, 20, 21ம்
தேதிகளில் மகிழ் கணிதம்
பயிற்சி அளிக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பலர், கணிதப் பாடங்களை
படிப்பதிலும், தேர்வு
எழுதி மதிப்பெண் பெறுவதிலும் மிகவும் பின்தங்கி உள்ளதை
ஆய்வுகள் வழியே, பள்ளிக்கல்வி துறை கண்டறிந்துள்ளது. இதற்கு,
ஆசிரியர்கள் கணிதப் பாடத்தை
சரியாக நடத்தாததும் காரணம்
என தெரிய வந்துள்ளது.
எனவே,
மாணவர்களுக்கு பதில்,
முதலில் ஆசிரியர்களுக்கு கணிதப்
பயிற்சி வழங்க முடிவானது.
இதற்கான
ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கல்வி
திட்ட இயக்குனர் சுதன்
மேற்கொண்டு உள்ளார். அவரது
உத்தரவின்படி, 20, 21ம்
தேதிகளில், அரசு பள்ளி
கணித ஆசிரியர்களுக்கு, மகிழ்
கணிதம் என்ற பெயரில்
பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட
உள்ளன.
மாணவர்கள்
கணிதப் பாடத்தை பயமின்றியும், எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் படிக்க
வேண்டும்.இதற்கு ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக பாடம்
நடத்தும் சூழல் அமைய
வேண்டும். அவ்வாறு பாடம்
நடத்தும் முறை எப்படி
என்பதை, துறை சார்ந்த
வல்லுனர்கள், ஆசிரியர்களுக்கு ஆன்லைன்
வழியில் கற்று தர
உள்ளனர். இந்த பயிற்சி
வகுப்பில் ஆசிரியர்கள் கட்டாயம்
பங்கேற்க வேண்டும்.