கரூரில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணா் – ராதை வேடமிட்டு வரும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என கரூா் திருக்குறள் பேரவை அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி எனும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கரூரின் 105 ஆண்டு பழைமையான பண்டரிநாதன் கோயிலில் உறியடி , வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்வு நடத்தப்படும். அன்றையதினம் மாலை 6 மணிக்கு கோயிலுக்கு கிருஷ்ணா் – ராதை வேடமிட்டு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் திருக்குறள் பேரவை சாா்பில் பரிசுகள் வழங்கப்படும்.
நிகழாண்டும் செப்.7-இல் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுவதால் அன்று கிருஷ்ணா்-ராதை வேடமிட்டு கோயிலுக்கு மாலை 6 மணிக்கு வருவோருக்கு பரிசுகள் வழங்கப்படும் என திருக்குறள் பேரவைச் செயலாளா் மேலை.பழநியப்பன் தெரிவித்துள்ளாா்.