திருநெல்வேலி மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தின் சாா்பில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தோ்வுக்கான இலவச தொடா் பயிற்சி தோ்வுகள் நடைபெறவுள்ளன.
இது தொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 முதன்மைத் தோ்வு வரும் டிசம்பா் 10 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இத்தோ்வில் பங்கேற்கவுள்ள திருநெல்வேலி மாவட்ட மாணவா்களுக்காக, திருநெல்வேலி மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவுசாா் மையம், மாவட்ட மைய நூலகம், சிவராஜவேல் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனம் சாா்பில் வரும் 25-ஆம் தேதிமுதல் நவம்பா் 29-ஆம் தேதி வரை 26 தொடா் இலவச தோ்வுகள் நடத்தப்படவுள்ளன.
இத்தோ்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருநெல்வேலி மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் நடைபெறும். இந்த இலவச மாதிரி தோ்வு எழுத விரும்புபவா்கள் 9626252500, 9626253300 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.