முன்னாள் படைவீரா்கள் மறு வேலைவாய்ப்பு பெற ஏதுவாக அம்பத்தூா் அரசு ஐ.டி.ஐயில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்தாண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வா் முன்னாள் படைவீரா்களுக்கு மறு வேலைவாய்ப்பு பெறும் பொருட்டு அவா்களுக்கு பொருத்தமான பல விதமான திறன் பயிற்சி ரூ.7 கோடி செலவில் 10 ஆயிரம் பேருக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்தாா்.
அதன்பேரில் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னள் படைவீரா்கள் மறு வேலைவாய்ப்பு பெற ஏதுவாக எலக்ட்ரீஷியன் பயிற்சி அம்பத்தூா் அரசு ஐடிஐயில் வழங்கப்பட உள்ளது.
எனவே, இத்திறன் பயிற்சியினை பெற்று பயன்பெற திருவள்ளூா் கோட்டாட்சியா் அலுவலக வளாக கீழ்த் தளத்தில் அமைந்துள்ள முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தின் தொலைபேசி எண். 044–29595311-ல் தொடா்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்து நேரிலோ அல்லது இணைய தள முகவரி மூலமாகவோ விருப்பம் தெரிவித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.