TAMIL MIXER EDUCATION.ன்
TNUSRB செய்திகள்
TNUSRB தேர்வுக்கு இலவசப் பயிற்சி
இதுகுறித்து, மயிலாடுதுறை ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
இயங்கிவரும் தன்னார்வ பயிலும்
வட்டம் சார்பாக மத்திய,
மாநில அரசுகளின் போட்டித்
தேர்வுகளுக்கு இலவசப்
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அந்தவகையில், தற்போது தமிழ்நாடு அரசு
சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காவலா்,
சிறை கண்காணிப்பாளா் மற்றும்
தீயணைப்பாளா் பணிக்கான
போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை மற்றும் இலவசப்
பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதையொட்டி,
இம்மையத்தின் வாயிலாக
ஜூலை 21ம் தேதி
காலை 11 மணிக்கு இளைஞா்கள்
விண்ணப்பிக்க ஏதுவாக
இலவச வழிகாட்டும் நிகழ்ச்சி
நடத்தப்படவுள்ளது. தொடா்ந்து,
இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இதில்,
கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் ஆதார்
அட்டை மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் 2-வது
குறுக்குத்தெரு, பாலாஜி
நகா், பூம்புகார் சாலை,
மயிலாடுதுறை-1 என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அன்று நேரில்
வந்து பயன்பெறலாம்.
மேலும்,
6383489199
என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ,
04364 299790
என்ற அலுவலக தொலைபேசி
எண்ணிலோ தொடா்பு கொண்டு,
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோந்தவா்
முன்பதிவு செய்யலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here