விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 28ம் தேதி துவங்குகிறது.விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இப்போட்டித் தேர்வில் பங்கேற்று, பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.இந்த வகையில், அடுத்ததாக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், ஆசிரியர் தகுதி தேர்விற்கான தேர்வு (டெட்) அறிவிப்பு வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது.
இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு, விழுப்பரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 28ம் தேதி காலை 10:00 மணியளவில் துவங்குகிறது.இப்பயிற்சி வகுப்பு, ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.
வகுப்பு தொடர்பான விவரங்களை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அணுகியோ அல்லது 90805 15682 என்ற மொபைல் எண்ணிலோ பதிவு செய்து கொள்ளலாம். விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள், இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.