TAMIL
MIXER EDUCATION.ன்
காவலர் தேர்வுக்கான செய்திகள்
2ம் நிலை
காவலர் தேர்வுக்கான இலவச
பயிற்சி வகுப்பு – கடலூர்
கடலூா் மாவட்டம் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
இருப்பதாவது “கடலூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும்
தன்னார்வ பயிலும் வட்டம்
வழியே பல போட்டித்
தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்போது தமிழ்நாடு சீருடைப்
பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல்துறையில் காலியாகவுள்ள 3,552 2ம் நிலைக்
காவலர், 2ஆம் நிலை
சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு
அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்
காலியிடங்களுக்கு www.tnusrb.tn.gov.in எனும்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்
தேர்வு வாரிய இணையதளம்
வாயிலாக வரும் 15.08.2022 வரை
விண்ணப்பிக்கலாம்.
இந்தநிலையில் இத்தேர்விற்கு தயாராகும்
கடலூரை சேர்ந்த போட்டி
தேர்வாளர்கள் மற்றும்
வேலை நாடுநர்கள் பயனடையும்
அடிப்படையில் அதற்கான
இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 11ஆம் தேதி
முதல் அம்மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.
இப்பயிற்சி வகுப்பு தினசரி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
காலை 10.30 மணி முதல்
பிற்பகல் 12.30 மணி வரை
நடத்தப்பட இருக்கிறது.
ஆகவே
இந்த பயிற்சி வகுப்பில்
பங்கேற்க விருப்பம் இருப்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும்
ஆதார்எண் ஆகிய விபரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அத்துடன்
இதுகுறித்த விபரங்களை 04142 290039
என்ற தொலைபேசி எண்ணில்
தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம். ஆகவே இந்த
பயிற்சி வகுப்புகளில் அரசு
பணிக்கு தயாராகி வரும்
கடலூர் மாவட்ட வேலைதேடும் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here