‘இரண்டாம் நிலைக் காவலர் தேர்வு பயிற்சி வகுப்பு, வரும், 29ல் துவங்குகிறது’ என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் வெண்ணைமலையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால், இரண்டாம் நிலைக் காவலர் மற்றும் இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் தேர்வு நடக்கிறது. இப்போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு வரும், 29 காலை, 11.00 மணிக்கு துவக்கப்படவுள்ளது.
மேலும், கல்வித்தொலைக்காட்சி மூலமாக பயிற்சி வகுப்பு, திங்கள் முதல் வெள்ளி வரை காலை, 7.00 மணி முதல், 9.00 மணி வரையிலும் மறு ஒளிபரப்பு இரவு, 7.00 மணி முதல், 9.00 மணி வரையிலும் ஒளிப்பரப்பாகும். மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்திலும், TncareerServicesEmployment என்ற Youtube சேனலிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, 04324-223555 என்ற தொலைபேசி எண்ணில் (அ) studycirclekarur@gmail.com என்ற இ.மெயிலில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.