வருமான வரி
தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
2020-2021 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை
தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மார்ச் 15 வரை வருமான
வரித்துறை நீட்டித்துள்ளது.
இருப்பினும், காலக்கெடுவில் இந்த
மாற்றம் சில வரி
செலுத்துவோருக்கு மட்டுமே
செய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19
மற்றும் தணிக்கை அறிக்கையின் மின்–தாக்கல் செய்வதில்
வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு,
2021-22 ஆம் ஆண்டிற்கான தணிக்கை
அறிக்கை மற்றும் ஐடிஆர்
ஆகியவற்றை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை CBDT நீட்டித்துள்ளதாக வருமான
வரித்துறை ட்வீட் செய்துள்ளது.
வரி
மற்றும் முதலீட்டு நிபுணர்
பல்வந்த் ஜெயின் கருத்துப்படி, இந்த காலக்கெடு அனைத்து
வரி செலுத்துவோருக்கும் இல்லை.
நிறுவனங்கள், சங்கங்கள், எல்எல்பி
ஆகியவற்றின் கீழ் கணக்குப்
புத்தகம் தணிக்கை செய்யப்பட
வேண்டிய வரி செலுத்துவோர்களுக்கு இந்த காலக்கெடு
நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும்
நிதி அமைச்சகம் வரி
தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதியை 15 ஜனவரி 2022 முதல்
15 பிப்ரவரி 2022 வரை நீட்டித்துள்ளது. இப்போது தணிக்கை அறிக்கையைப் பதிவேற்றுவதற்கான காலக்கெடு
பிப்ரவரி 15, 2022 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய
வரி செலுத்துவோர் ஐடிஆர்
தாக்கல் செய்வதற்கான காலக்கெடு
மார்ச் 15, 2022 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயின்
கூறினார்.
சாதாரண
வரி செலுத்துவோருக்கான வருமான
வரிக் கணக்கைத் தாக்கல்
செய்வதற்கான காலக்கெடு டிசம்பர்
31, 2021 அன்று முடிவடைந்தது. இந்த
ஆண்டு, கோவிட் -19 நெருக்கடி
மற்றும் வருமான வரித்
துறையின் புதிய போர்ட்டலை
அறிமுகப்படுத்தியதன் காரணமாக
வரி செலுத்துவோர் நிறைய
சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.