வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்
உதவித் தொகை பெற
விண்ணப்பிக்கலாம் – கோவை
கோவை
கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம்
மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பத்தாம் வகுப்பு
தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்,
200 ரூபாய், பத்தாம் வகுப்பு
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய்,
பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 ரூபாய் பட்டம்
பெற்றவர்களுக்கு, 600 ரூபாய்வங்கி கணக்கில் இ.சி.எஸ்.,
மூலம் ஒவ்வொரு காலாண்டுக்கும் செலுத்தப்படுகிறது.
இதன்படி,
வரும் மார்ச் 31ம்
தேதியுடன் முடியும் காலாண்டுக்கு, புதிய பயனாளிகள் கண்டறியப்படுகிறது.இந்த உதவித்தொகையை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்து, 5 ஆண்டுகளுக்கு மேல்
காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டு நிறைவடைந்திருக்க வேண்டும்.
பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்/தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 600 ரூபாய்,
பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய், பட்டதாரி
மற்றும் முதுநிலை பட்டதாரி
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆயிரம்
ரூபாய் மாதந்தோறும் வழங்கும்
திட்டம் அமலில் உள்ளது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், 2022ம்
ஆண்டு மார்ச் 31ம்
தேதியன்று 45 வயதுக்கு மிகாமலும்
மற்றவர்கள், 40 வயதுக்கு மிகாமலும்
இருக்க வேண்டும்.
மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம்,
72 ஆயிரம் ரூபாய் மிகாமல்
இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வருமான
உச்சவரம்பு இல்லை.விண்ணப்பிக்கும் நபர்பள்ளி அல்லது கல்லுாரி
படிப்பை தமிழகத்திலேயே முடித்து
இங்கேயே, 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க
வேண்டும்.கல்வி நிறுவனத்துக்கு தினமும் சென்று படிக்கும்
மாணவ, மாணவிகளாக இருக்க
கூடாது. தொலைதுாரக்கல்வி மற்றும்
அஞ்சல் வழிக்கல்வி கற்கும்
மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
மனுதாரர்
உதவித்தொகை பெறும் காலங்களில், வேலைவாய்ப்பு அலுவலக
பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.இந்த
உதவித்தொகை பெற தகுதியுள்ளவர்கள், https://tnvelaivaaippu.gov.in என்ற
இணையதளத்தில் உரிய
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதை
பூர்த்தி செய்து, வருவாய்
ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று
வேலைவாய்ப்புஅலுவலகத்துக்கு, நேரில்
சென்று சமர்ப்பிக்க வேண்டும்.