பெரம்பலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (நவ.8) நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், பெரம்பலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை (ஐடிஐ, டிப்ளமோ) படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தீன்தயான் உபாத்யாய கிராமின் கௌசல்யா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.
இம் முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் சுய விவரக் குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 9444094136, 04328–225362 ஆகிய தொலைபேசி எண்களில், அல்லது வட்டார இயக்க மேலாளா்கள் வேப்பந்தட்டை 8098739400, பெரம்பலூா் 6383774958, ஆலத்தூா் 9659935852, வேப்பூா் 8870460112 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.