நாளை நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் ரத்து – சிவகங்கை
சிவகங்கை
மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை (ஜன.8) நடைபெற இருந்த
வேலைவாய்ப்பு முகாம்
ரத்து செய்யப்படுவதாக சிவகங்கை
மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன்
ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிவகங்கை
மாவட்டத்தில் தமிழ்நாடு
மாநில ஊரக வாழ்வாதார
இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்
நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சனிக்கிழமை (ஜன.8) காரைக்குடி அழகப்பா
கலைக்கல்லூரியில் முகாம்
நடைபெற இருந்தது.
இந்நிலையில், கரோனா தொற்று பரவலைக்
கட்டுப்படுத்தும் வகையில்
தற்போது தளா்வுகளுடன் கூடிய
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே
மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் தற்காலிகமாக தேதி
குறிப்பிடப்படாமல் ஒத்தி
வைக்கப்படுகிறது.