பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி – மத்திய அரசின் திட்டம்
நமோ ட்ரோன் திதி திட்டத்தின் கீழ் 1,000 பெண்களுக்கு ட்ரோன்களை பிரதமர் மோடி வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களுக்கு ட்ரோன் இயக்குவதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை குறித்தும் இதில் பெண்களுக்கு கிடைக்கும் பலன்களை பற்றியும் இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
நமோ ட்ரோன் திதி திட்டம் : நமோ ட்ரோன் திதி திட்டத்தின் நோக்கமே நாடு முழுவதும் உள்ள 15,000 சுய உதவிக்குழுக்களில் இருக்கும் பெண்களை ஒன்றினைத்து அவர்களுக்கு விவசாயத்திற்கு உதவும் வகையான ட்ரோன் பயிற்சி அளித்து, ட்ரோன் பைலட்டாக மாற்றுவது. இதற்கு முதற்கட்டமாக சஷக்த் நாரி விக்சித் பாரத் திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, 1,000 ட்ரோன்களை பெண்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் பெண்கள் தங்களில் ட்ரோன் இயக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர்.
விவசாய நிலங்களில் உரங்கள் தளிர்க்க, விதைகளை போட மற்றும் கண்கானிக்க ட்ரோன்கள் சமீப காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால், இப்பணிகள் எளிமையாகவும் விரைவாகவும் செய்யப்படுகிறது.
இதில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும். மேலும், அவர்களுக்கு வருவாய் கிடைக்கும்.
நாடு முழுவதும் கிராமப்புற பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் ட்ரோன் இயக்குவதற்கான பயிற்சி வழங்கப்படகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற பெண்கள் தங்களின் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow