TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
இந்துஸ்தான் கல்லுாரியில்
ட்ரோன்
பயிற்சி
மையம் துவக்கப்பட்டது
ஒத்தக்கால்மண்டபம்
இந்துஸ்தான்
இன்ஜி.,
தொழில்நுட்ப
கல்லுாரியில்,
ட்ரோன்
விமான
ஓட்டுனர்
பயிற்சி
மையம்
துவக்கப்பட்டது.
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள
ட்ரோன்
கொள்கையின்
படி,
இனி
இந்திய
விமான
போக்குவரத்து
கழகத்தால்,
அங்கீகரிக்கப்பட்ட
பயிற்சி
மையம்
(ஆர்.பி.டி.ஓ.,) வாயிலாக பயிற்சி பெற்ற விமானிகள் மட்டுமே, இனி ட்ரோனை இயக்க முடியும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் கோவை மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களில் ட்ரோன் விமான பயிற்சி மையத்தை (ஆர்.பி.டி.ஓ.,), தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில்
அமைந்துள்ள
இந்துஸ்தான்
இன்ஜி.,
தொழில்நுட்ப
கல்லுாரியிலும்,
ட்ரோன்
விமான
பயிற்சி
மையம்
துவக்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் ஜெயா கூறுகையில், இந்துஸ்தான் இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில்
அமைக்கப்பட்டுள்ள
ஆய்வகத்தில்
ட்ரோன்
தயாரிப்பு,
வடிவமைப்பு,
உருவாக்கும்
முறை,
பயன்பாடுகள்
போன்ற
பல்வேறு
தகவல்கள்
கற்றுத்தரப்படுகின்றன.
கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும், ட்ரோன் பயிற்சி பெறலாம். மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.