TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதில் குழப்பம்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில், 17 கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு, சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த அறிவிப்பில், வரிசை எண், இன சுழற்சி, முன்னுரிமையுள்ளவர்கள், பாலினம் ஆகிய விபரங்கள் அறிவித்து உள்ளனர். எந்தெந்த கிராமங்களுக்கு என்ன இன சுழற்சி ஒதுக்கீடு என்கிற முறை அறிவிக்கவில்லை. மற்றொரு தாளில் காலியாக உள்ள கிராமங்களின் பெயர்களை வரிசைபடுத்தி அச்சடித்து ஒட்டியுள்ளனர்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதனால், எந்த கிராமத்திற்கு யார் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரியாமல் பல தரப்பட்ட விண்ணப்பததாரர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
எனவே, வருவாய்த் துறை நிர்வாகம், காலி பணியிடங்களுக்கு நேராக, எந்த கிராமத்திற்கு யார் விண்ணப்பிக்க வேண்டும் என்ற விபரத்தை, முறையாக அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் & கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு Online மூலமாக விண்ணப்பித்து தரப்படும்


