‘சிப்போ’ இலவச பயிற்சி வகுப்புகள்
‘சிப்போ’ இலவச பயிற்சி வகுப்புகள்
மதுரையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) இணைந்து தொழில்முனைவோருக்கான திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி வகுப்புகள் மஹபூப்பாளையம் ‘சிப்போ’ அலுவலகத்தில் துவங்கவுள்ளன.களிமண், காகித கூழ் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சி, மண்பாண்ட கலை திறன்மேம்பாட்டு பயிற்சிகள் முறையே 1 -3 மாதப் பயிற்சிகளாக அளிக்கப்படவுள்ளது.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 35 வயதுள்ள இருபாலரும் சேரலாம். பயிற்சியில் மாதம் ரூ.12,500 உதவித் தொகை, மதிய உணவு, பயிற்சி கையேடு, பயிற்சிக்கு பின் சான்றிதழ், தொழில் துவங்க ஆலோசனைகள் வழங்கப்படும்.
விருப்பம் உள்ளோர் ‘சிப்போ அலுவலகம், 52 டி.பி., ரோடு, மஹபூப்பாளையம், மதுரை -16’ என்ற முகவரியில் அல்லது 0452 – 260 2339ல் தொடர்புகொள்ளலாம் என பொது மேலாளர் பழனிவேல்முருகன் தெரிவித்துள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow