சுய தொழில்
தொடங்க ரூ.5 லட்சம்
வரை மத்திய அரசு
கடன்
முத்ரா
கடன் வழங்கும் திட்டம்
மூலம் சுயதொழில் தொடங்குவோருக்காக மத்திய அரசால்
அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய
அரசு சுய தொழில்
தொடங்க விரும்புவோருக்கான ‘முத்ரா
கடன் திட்டம் ‘என்ற
சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முத்ரா கடன்கள்
சிறு தொழில், வியாபாரம்,
சேவைகள் என பல்வேறு
தொழில்களுக்கு உதவுகின்றன. இதன் மூலம் வேலை
வாய்ப்புகளை உருவாக்கவும் மற்றும்
வருமானத்தை பெருக்கவும் இந்த
கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும்
பிரதமர் முத்ரா யோஜனா
என்ற திட்டத்தின் கீழ்
வங்கிகளும் மற்றும் நிதி
நிறுவனங்களும் தொழில்களுக்கான கடன்களை வழங்குகின்றன. சிசு
கடன், கிஷோர் கடன்,
தருண் கடன் என
முத்ரா கடன்கள் மூன்று
வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனை
அடுத்து இம்மூன்று வகை
முத்ரா கடன் திட்டங்கள், கடன் தொகைக்கு ஏற்ப
பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி
சிசு கடனுக்கு ரூபாய்
50000 வரையிலும், கிஷோர் கடனுக்கு
ரூபாய் 50001 முதல் 5 லட்சம்
வரை மற்றும் தருண்
கடனுக்கு ரூ. 5 லட்சத்துக்கு மேல் 10 லட்சத்துக்குள் என
இவ்வாறு கடன் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டம் இளம்
தொழில் முனைவோர் மத்தியில்
நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.