காய்கறி, பழவகை
சாகுபடிக்கு பயிற்சி
கோவை கலெக்டர் சமீரன் அறிக்கை:
தாட்கோ
வாயிலாக, ஆதிதிராவிட விவசாயிகளுக்கு காய்கறி மற்றும் பழவகை
சாகுபடி செய்ய, எஸ்.சி.,
70 நபர்கள், எஸ்.டி.,
55 நபர்களுக்கு, இரண்டு நாட்கள்
பயிற்சியளிக்கப்படுகிறது.
மேலும்,
வனத்துறை வழியாக வேளாண்
காடுகள் மற்றும் நர்சரி
உருவாக்கி விற்பனை செய்ய
எஸ்.சி., 8 நபர்கள்,
எஸ்.டி., 40 நபர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியும் வழங்கப்படுகிறது.வேளாண்
பொறியியல் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம்
செய்ய, எஸ்.சி.,
80 நபர்கள், எஸ்.டி.,
50 நபர்களுக்கு மூன்று நாள்
பயிற்சியும் நடத்த உத்தரவிட்டு, நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
கோவை
மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொள்ள
பெயர், முகவரி, ஆதார்
எண், மொபைல்போன் எண்
குறிப்பிட்டு, விண்ணப்பத்துடன் ஜாதி சான்றிதழ் நகல்
இணைத்து, ‘மாவட்ட மேலாளர்,
தாட்கோ, டாக்டர் பாலசுந்தரம் ரோடு, கோவை -641018′ என்ற
முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும். dmcbetahdco@yahoo.com என்ற
இ–மெயில் முகவரியிலும் அனுப்பி வைக்கலாம்.