மத்திய அரசின்
வீடு கட்ட மானியத்தொகை – மார்ச் 31 கடைசி தேதி
மோடி
தலைமையிலான மத்திய அரசு
ஆனது வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களின்
வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து,
அதனை செயல்படுத்தி வருகிறது.
அவற்றில் மிகவும் முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் கருதப்படுவது, பிரதான் மந்திரி ஆவாஸ்
யோஜனா திட்டம் எனப்படும்
பிரதமரின் வீடு வசதி
திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் ஏழை மக்கள்
விண்ணப்பித்தால் அவர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள
மானியத்துடன் கடன்
வழங்கப்படும். இந்த
கடன் ஆனது அதிகபட்சம் ரூ.2.67 லட்சம் வரை
வழங்கப்படும். அவற்றின்
உதவியால் ஏழை மக்கள்
தங்களுக்கான வீட்டினை கட்டிக்
கொள்ளலாம்.
வீடு கட்ட
மானியம் பெறுவதற்கான தகுதிகள்:
இத்திட்டத்தில் முதன்முதலாக இணைவோராக இருக்க
வேண்டும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்போர் குறிப்பிட்ட 4 பிரிவுகளில் அடங்குபவராக இருக்க வேண்டும். அவர்கள்
மட்டுமே இத்திட்டத்தின் கீழ்
பயன் பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவர்.
விண்ணப்பிப்போரின் குடும்ப
ஆண்டு வருமானம் ரூ.3
லட்சத்திற்கும் மேல்
இருக்க கூடாது.
விண்ணப்பிப்போரின் குடும்ப
ஆண்டு வருமானம் ரூ.3
லட்சம் முதல் ரூ.6
லட்சம் வரை.
விண்ணப்பிப்போரின் குடும்ப
ஆண்டு வருமானம் ரூ.6
லட்சம் முதல் ரூ.12
லட்சம் வரை.
விண்ணப்பிப்போரின் குடும்ப
ஆண்டு வருமானம் ரூ.12
லட்சத்துக்கும் மேல்
ஆனால் ரூ.18 லட்சத்திற்கு குறைவாக இருப்பது.
மத்திய அரசின்
இத்திட்டத்தின் கீழ்
கடனுடன் இணைக்கப்பட்ட மானியத்
திட்டத்துக்கு (CLSS) மட்டுமே
2021 மார்ச் 31 கடைசி தேதி
ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற
பிரிவுக்கான (LIG/EWS) கடைசித்
தேதி 2022 மார்ச் 31 வரை
உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற
விரும்புவோர் http://pmaymis.gov.in என்ற
தளத்தின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம்
இன்னும் சில தினங்கள்
மட்டுமே உள்ளதால் தகுதியானோர் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.