TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
CBSE தேர்வு
முடிவுகள் ஜூலை இறுதிக்குள்
10, 12ம்
வகுப்பு தேர்வு முடிவுகளை
மத்திய இடைநிலைக் கல்வி
வாரியமான CBSE ஜூலை
இறுதிக்குள் வெளியிடலாம்.
இருப்பினும், 10ம் மற்றும் 12ம்
வகுப்பு தேர்வு முடிவுகள்
தேதி குறித்து CBSE
இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. இருப்பினும் இம்மாத இறுதிக்குள் முடிவுகள்
அறிவிக்கப்படும் என
கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக
நேற்று மத்திய கல்வி
அமைச்சர் தர்மேந்திர பிரதான்,
நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசுகையில், CBSE 10ம்,
12ம் வகுப்பு தேர்வு
முடிவுகள் குறித்த நேரத்தில்
வெளியிடப்படும் என்றும்,
தாமதம் ஏற்படாது என்றும்
அவர் கூறினார்.
CBSE
Term 2 10ம் மற்றும்
12ம் வகுப்பு தேர்வுகள்
கடந்த ஏப்ரல் 26ம்
தேதி தொடங்கியது என்பது
குறிப்பிடத்தக்கது. அதன்
பிறகு 10ம் வகுப்பு
தேர்வு மே 24ம்
தேதி வரையும் மற்றும்
12ம் வகுப்பு தேர்வு
2022 ஜூன் 15 தேதி வரையும்
நடைபெற்றது. தற்போது, இந்த
தேர்வு முடிவுகள் தொடர்பான
சமீபத்திய புதுப்பிப்புக்காக வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த
தேர்வு முடிவுகள் வெளியான
பிறகு, மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.cbse.gov.in/
ஐப் பார்வையிடுவதன் மூலம்
தேர்வு முடிவைச் சரிபார்க்க முடியும். இதற்கு அவர்கள்
தங்களின் ரோல் எண்,
பள்ளிக் குறியீடு, பிறந்த
தேதி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளம்
தவிர, டிஜிலாக்கர் மற்றும்
SMS மூலமாகவும் Result பார்க்கலாம்.
SMS மூலம் CBSE 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்ப்பது?: Click
Here
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


