Join Whatsapp Group

Join Telegram Group

தொழில்முனைவோர்களுக்கு மானியத்துடன் தொழிற்கடன்

By admin

Updated on:

தொழில்முனைவோர்களுக்கு மானியத்துடன் தொழிற்கடன்

தொழில்முனைவோர்களுக்கான மானியத்துடன் தொழிற்கடன் திட்டங்கள் மூலமாக, புதிய
வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் என, மாவட்ட நிர்வாகம்
அழைப்பு விடுத்துள்ளது.

புதிய
தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில், ‘நீட்ஸ்திட்டம்,
படித்த இளைஞர்களுக்கு வேலை
வாய்ப்பு உருவாக்கும் திட்டம்,
பிரதமரின் வேலை வாய்ப்பு
உருவாக்கும் திட்டங்களில், மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.படித்த
இளைஞர்களுக்கு வேலை
வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், அதிகபட்சமாக, 2.5 லட்சம் ரூபாய்
மானியத்துடன், தொழிற்கடன் வழங்கப்படும். மாவட்டத்தில், 400 நபர்களுக்கு, நான்கு
கோடி ரூபாய் அளவுக்கு,
மானியத்துடன் கடன்
வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இதுவரை, 71 நபர்களுக்கு, 90 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மானியத்துடன் கடன் நீட்ஸ்
திட்டத்தில், 10 லட்சம் ரூபாய்
முதல், ஐந்து கோடி
ரூபாய் வரை, 25 சதவீத
மானியத்துடன் (அதிகபட்சம், 75 லட்சம் ரூபாய்), 3 சதவீத
வட்டி மானியத்துடன் கடன்
வழங்கப்படும். நடப்பு
ஆண்டில், 155 நபர்களுக்கு, 12.60 கோடி
ரூபாய் மானியத்துடன் கடன்
வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 50 நபர்களுக்கு, 15.31 கோடி
ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின்
வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், 25 சதவீத மானியமும்,
சிறப்பு பிரிவினருக்கு, 35 சதவீத
மானியமும் வழங்கப்படும். நடப்பு
ஆண்டில், 95 பேருக்கு, 2.75 கோடி
ரூபாய் மானியத்துடன் கடன்
வழங்க இலக்க நிர்ணயிக்கப்பட்டது; இதுவரை, 44 பேருக்கு,
1.97
கோடி ரூபாய் மானியத்துடன் கடன் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், ‘நீட்ஸ்
திட்டங்களில் கடன்பெற,
www.msmeonline.tn.gov.in என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிரதமரின் வேலை
வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், https://www.kviconline.gov.in/pmegpeportal/pmegphome/index.jsp  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல்,
விவரங்களுக்கு, மாவட்ட
தொழில் மையத்தில் உள்ள
வழிகாட்டி மையத்தை, 70105 21715 என்ற
எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]