பென்சன்தாரர்கள் வாழ்வு
சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்
பென்ஷன்
வாங்கும் சந்தாதாரர்கள் அனைவரும்
தொடர்ந்து பென்ஷன் பெற
வேண்டுமென்றால் வாழ்வு
சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது
கட்டாயம்.
வாழ்வுசான்றிதழ் என்பது ஒரு நபர்
இன்னும் உயிருடன் தான்
இருக்கிறார் என்பதற்கான ஆதாரச்
சான்றாகும். ஒவ்வொரு வருடமும்
இந்த வாழ்வு சான்றிதழை
பென்சன் வாங்குபவர்கள் நவம்பர்
மாத இறுதிக்குள் தாக்கல்
செய்திருக்க வேண்டும்.
இருப்பினும் இந்த வருடம் வாழ்வு
சான்றிதழை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர்
31ஆம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே
பென்ஷன் தாரர்கள் சமர்ப்பிக்க இன்னும் சில நாட்கள்
மட்டுமே இருப்பதால் சீக்கிரம்
வேலையை முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.