TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது – அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் பெரும்பாலும்
மக்கள்
பொதுப்போக்குவரத்தையே
பயன்படுத்துகின்றனர்.
இந்த
நிலையில்
கடந்த
2021ம்
ஆண்டு
தலைமை
ஏற்ற
திமுக
அரசு
மாநகர
அரசு
பேருந்துகளில்
பெண்களுக்கு
இலவச
பயணத்
திட்டத்தை
அறிமுகப்படுத்தியது.
இத்திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திட்டம் அமலுக்கு வந்த பிறகு அரசு பேருந்துகளில்
பயணிக்கும்
பெண்களின்
எண்ணிக்கை
நாளுக்கு
நாள்
அதிகரித்தது.
அரசின் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும்
இதன்
மூலம்
இதுவரை
செலவழித்து
வந்த
பேருந்து
கட்டணத்தொகை
தற்போது
சேமிக்கப்பட்டு
வருவதாகவும்
பெண்கள்
கருத்து
தெரிவித்தனர்.
மற்றொருபுறம்
இந்த
இலவச
பயணத்திட்டதால்
போக்குவரத்து
துறை
கடும்
நஷ்டத்தை
சந்தித்தது.
அதனால்
போக்குவரத்து
கழக
ஊழியர்களுக்கு
சம்பளம்
வழங்க
முடியாத
நிலைக்கு
அரசு
தள்ளப்பட்டது.
இதனை ஈடு செய்ய பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தப் போவதாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தது. இது குறித்து பேசிய போக்குவரத்து
துறை
அமைச்சர்
சிவசங்கர்
தமிழக
மக்களின்
நலனை
கருத்தில்
கொண்டு
பேருந்து
கட்டணம்
உயர்த்தப்பட
மாட்டாது
என்று
தெரிவித்துள்ளார்.
தற்போது போக்குவரத்து
துறையை
நஷ்டத்தில்
இருந்து
மீட்க
தேவையான
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு
வருவதாகவும்
தெரிவித்துள்ளார்.