ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைப்பது எப்படி?
தமிழகத்தில் இலவசம் மின்சாரம் மற்றும் மானிய விலையில் மின்சாரம் பெற ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் என்னை இணைத்து இருக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஆதார் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஆதார் இல்லாதவர்கள் புதிதாக ஆதாரத்தை விண்ணப்பித்த நகலுடன், பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் வைத்து இலவச மற்றும் மானியம் மின்சாரத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆதாரை மின் நுகர்வோர் என்னுடன் இணைப்பது எப்படி?
மின் பகிர்வு நிறுவன (Discom) இணையதளத்தில், “Consumer Info” வின் கீழ் ஆதாரை மின் நுகர்வோர் என்னுடன் இணைப்பதற்கான லிங்க் இன்னும் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும். அதில் தகவலை பூர்த்தி செய்தால் உங்களது மொபைலில் இருக்கு OTP அனுப்பப்படும்.
மேலும் ஆன்லைனில் மின்சாரம் கட்டணம் செலுத்தும் போது தங்களது மின்சார நுகர்வோர் என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க தகவல் தரப்படும். ஆதார் எண்ணுடன் மின்சார நுகர்வோர் என்னை இணைப்பதற்கு காலக்கேடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்தும் போதும் தங்களது மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
Anonymous
October 15, 202209511002208