TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas)
அடுத்த தலைமுறைக்கும் வருமானம்
தரக்கூடிய
செம்மரம் வளர்ப்பு
செம்மரங்களை வளர்க்கும் போது, கிராம
நிர்வாக அலுவலரிடம் சிட்டா
அடங்கலில் செம்மரம் சாகுபடி
செய்யப்பட்டுள்ளது என்று
பதிவு செய்ய வேண்டும்.
அதன்பிறகு செம்மரக்கட்டைகளை விற்பனை
செய்யும் போது மாவட்ட
வன அதிகாரியிடம் (District Forest
Officer). இந்த மரத்தை விற்பனை
செய்வதற்கான அனுமதியை பெற
ஒரு விண்ணப்பம் அளிக்க
வேண்டும்.
நடவு செய்வதற்கு ஏற்ற மண்:
பொதுவாக
செம்மரம் செம்புறைகள் (Laterite Soil) என்று
சொல்லும் மண்ணில் வளர்ந்தால் மட்டுமே சிவப்பு நிறத்துடன் கூடிய செம்மரம் கிடைக்கும்.
இந்த
மரத்தை செம்மண், கல்
கலந்த மண், செம்மண்
கலந்த மண்ணில் வளர்க்கப்படும் போது மட்டுமே நல்ல
திடமான கட்டை கிடைக்கும். விவசாயிகள் இந்த மரத்தை
நடுவு செய்வதற்கு முன்பு
மண் பரிசோதனை செய்து
கொள்வது சிறந்தது.
நடவு செய்யும் முறை:
முதல்
பருவ மலைக்கு முன்பாக
சுமார் 3 அடி குழி
எடுத்துக்கொண்டு, இரண்டாவது
மலைக்கு முன்பாக நடவு
செய்திட வேண்டும். அதிக
நீர் தேவை இருக்காது.
மண்ணில் ஈரப்பதம் இருக்கும்
அளவை பார்த்துக் கொண்டால்
போதுமானது. இரண்டு மாதம்
வரை பராமரிப்பு செய்ய
வேண்டும்.
8 அடிக்கு
8 அடி இடைவெளியில் ஒரு
நாற்று நடவு செய்யலாம்.
சுமார் 800 நாட்களுக்கு ஒரு
ஏக்கருக்கு தேவைப்படும். நாற்றுக்களை நட்டவுடன், காடுகளை சுற்றி
பாதுகாப்பு வேலி அமைக்க
வேண்டும். இதனை நிலப்பரப்பு முழுவதும் வளர்க்க விரும்பாதவர்கள் வரப்பு பயிராகவும் வளர்க்கலாம்.
பராமரிப்பு:
பெரிய
பராமரிப்பு தேவைப்படாது. நாற்று
நட்டு ஒரு வருடம்
வரை மட்டும் மண்
இறப்பதத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் போதும்.
களை இருக்காது, பூச்சி
தாக்குதல் இருக்காது. 15 – 25 வருடம்
வரை இந்த மரத்தை
வளர்க்கும் போது, மட்டுமே
இதில் மருத்துவ குணம்
உருவாகும். அதன்பின் இந்த
மரம் ஒன்று 100 கிலோ
இடையில் இருக்கும். ஒரு
கிலோ ரூபாய் ஆயிரம்
வரை விலை போகும்
போது ஒரு மரத்திற்கு மட்டுமே ரூபாய் ஒரு
லட்சம் வரை லாபம்
பெறலாம்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow