மதுரை வேளாண்
அறிவியல் கல்லூரி மையத்தில்
தேனீக்கள் வளா்ப்புப் பயிற்சி
ஜனவரி
4ம் தேதி முதல்
10ம் தேதி வரை
ஒருவாரகாலப் பயிற்சி நடைபெறவுள்ளது.
இதில்
தேனீக்கள் வகைகள், அதன்
பண்புகள், தேனீ குடும்பம்,
அதன் பணிகள், வணிகரீதியில் தேனீ வளா்ப்பு, தேனீக்களைப் பராமரித்தல், தேனீக்களை தாக்கும்
பூச்சிகள் மற்றும் நோய்கள்
மேலாண்மை, கொசுத்தேனீ வளா்ப்பு,
ஒருங்கிணைந்த பண்ணைய
முறையில் தேனீ வளா்ப்பு
தொழில்நுட்பங்கள், தேன்
மற்றும் இதர பொருள்கள்
தயாரிப்பு குறித்தும் செயல்விளக்கம் கற்றுத்தரப்படும்.
தேனீக்கள்
வளா்ப்பில் வெற்றியடைந்தவா்கள், தொழில்
முனைவோர் தோட்டங்களுக்கு சுற்றுலா
அழைத்துச் செல்லப்படுவா். இப்பயிற்சிக்கு வர விருப்பம் உள்ள
விவசாயிகள், மகளிர் சுய
உதவிக்குழுவினா் 9488448760 என்ற
கைப்பேசி எண்ணில் தொடா்பு
கொண்டு பதிவு செய்து
கொள்ளலாம்.
முதலில்
வரும் 25 நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.