Join Whatsapp Group

Join Telegram Group

மனிதநேய மையம் சார்பில் நீதிபதி தேர்வுக்கு இலவச பயிற்சி

By admin

Updated on:

மனிதநேய மையம்
சார்பில் நீதிபதி தேர்வுக்கு இலவச பயிற்சி

மனிதநேயம்
இலவச ..எஸ்.,
கல்வியகம், தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரி பார் கவுன்சில்
சார்பில், அரசு உதவி
குற்றவியல் வழக்கறிஞர் நிலை
முதன்மை தேர்வு
மற்றும் சிவில் நீதிபதி
முதல்நிலை தேர்வுக்கு, இலவச
பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட
உள்ளன.

டி.என்.பி.எஸ்.சி.,
சார்பில், நவம்பர் 6ம்
தேதி நடத்தப்பட்ட, அரசு
உதவி குற்றவியல் வழக்கறிஞர் நிலை இரண்டு தேர்வு
எழுதிய வழக்கறிஞர்களுக்கு, முதன்மை
தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வரும்
மே மாதம் அறிவிக்கப்பட உள்ள, உரிமையியல் நீதிபதி
முதல்நிலை தேர்வுக்கும் பயிற்சி
அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி
வகுப்புகள் 20ம் தேதி
முதல் தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரி பார் கவுன்சில்
ஆடிட்டோரியத்தில் நடக்கும்.
விண்ணப்பிக்க விரும்புவோர், நாளை முதல் ஜன.,
16
வரை 28 முதல் பிரதான
சாலை, சி..டி.,
நகர், சென்னை – 35 என்ற
முகவரியில் அமைந்துள்ள, மனிதநேயம்
இலவச கட்டணமில்லா ..எஸ்.,
கல்வியகம் அல்லது தமிழ்நாடு
மற்றும் புதுச்சேரி பார்
கவுன்சில் அலுவலகத்திற்கு நேரில்
சென்று பதிவு செய்து
கொள்ளலாம்.

மேலும்,
044 – 2435 8373, 2433 0952, 84284 31107
ஆகிய எண்களை
தொடர்பு கொண்டு பதிவு
செய்து கொள்ளலாம்.

கொரோனா
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]