Join Whatsapp Group

Join Telegram Group

PUBG விளையாட்டை போலவே Battlegrounds Mobile India – முன்பதிவு தொடக்கம்

By admin

Updated on:

PUBG விளையாட்டை போலவே
Battlegrounds Mobile India –
முன்பதிவு தொடக்கம்

இந்தியாவில் சீன நாட்டு செயலிகளை
புறக்கணிக்க வேண்டும் என
கடந்த செப்டம்பர் மாதம்
117
செயலிகளுக்கு தடை
விதிக்கப்பட்டது. அதில்
மல்டி பிளேயர் மொபைல்
கேம் அப்ளிகேஷனான பப்ஜி
விளையாட்டும் முடக்கப்பட்டது. இதனால் இந்த விளையாட்டிற்கு அடிமையான பலர் பாதிக்கப்பட்டனர். இந்த விளையாட்டு மூலமாக பல குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டது என
சிலர் இந்த விளையாட்டு முடக்கப்பட்டதற்கு வரவேற்பும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த PUBG விளையாட்டை போலவே
தென் கொரியாவை சேர்ந்த
வீடியோ கேம் டெவலப்பரான ‘KRAFTON’ என்ற நிறுவனம்
Battlegrounds Mobile India
என்ற கேமை
வடிவமைத்துள்ளது. இது
இந்தியாவின் PUBG மொபைல் கேம்
வெர்ஷன் என சொல்லப்படுகிறது. இந்த மொபைல் கேமுக்கான
முன்பதிவு இன்று ஆரம்பமாகி
உள்ளது.

தற்கட்டமாக ஆண்ட்ராய்டு போன் பயனர்கள்
இந்த கேமை பயன்படுத்தும் வகையில் அதற்கான முன்பதிவை
KRAFTON
நிறுவனம் பிளே ஸ்டோரில்
தொடங்கி உள்ளது. பிளே
ஸ்டோரில் BATTLEGROUNDS MOBILE INDIA என்ற
அப்ளிகேஷனை Pre-register பட்டனை
செலக்ட் செய்வதன் மூலம்
இந்த செயலியை பயன்படுத்த முடியும். இந்த அப்ளிகேஷன் இந்தியாவில் எப்போது வெளியாகிறது என்பது குறித்து எந்த
அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Related Post

1 thought on “PUBG விளையாட்டை போலவே Battlegrounds Mobile India – முன்பதிவு தொடக்கம்”

Leave a Comment

× Printout [1 page - 50p Only]