போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் விழுப்புரம்,கோவை. சென்னை, சேலம், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் உள்ள பணிமனைகளில் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது.
டிகிரி, இன்ஜினியரிங், டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி வழங்கப்படும் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள், போக்கு வரத்து பணிமனை வாரியாகஉள்ள காலியிடங்களின் விவரங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
அட்டவணை:
Apprentices பயிற்சியிட விவரங்கள்
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். www.nats.education.gov.in என்ற வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை, நிபந்தனைகள் உள்பட அனைத்து விவரங்களையும் தேர்வர்கள் இந்த அறிவிப்பில் http://boat-srp.com/wp-content/uploads/2024/09/TNSTC_REGION_NOTIFIATION.pdf தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முறை: தேர்வு எதுவும் கிடையாது. மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 21.10.2024 கடைசி நாள் ஆகும்.