டிஎன்பிஎஸ்சி தொகுதி 2 மற்றும் 2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அக்.14 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடுஅரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தொகுதி-2-க்கு 507 காலிப்பணியிடங்கள், தொகுதி 2ஏ-வுக்கு 1,820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2,327 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான முதல் நிலைத்தோ்வு செப்.14-ஆம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, தொகுதி 2 மற்றும் 2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் அக்.14 முதல் அக்.18 வரை நடத்தப்படவுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் தொகுதி-2 மற்றும் 2ஏ முதல் நிலைத்தோ்வு எழுதிய நுழைவுச்சீட்டு நகல், ஆதாா் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் கிண்டியிலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தை நேரடியாக அணுகலாம். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள decgccoachingclass@gmail.com
எனும் மின்னஞ்சலில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.