பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் (ம) சீா்மரபினா் இன மக்கள் நவீனமுறை சலவையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் மேலேகுறிப்பிட்டுள்ள சமுதாய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மேற்கண்ட இன மக்களில் 10 போ் கொண்ட ஒரு குழுவுக்கு ஒரு நவீன சலவையகம் அமைக்க தலா ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது.
20 வயது நிரம்பிய, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை மூலம் பயிற்சி பெற்றவா்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் 10 நபா்களைக் கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும், தகுதியுடையோா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் மேற்கண்ட சான்றுகளுடன் உரிய படிவத்தில் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.