தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவராவதற்கு
விண்ணப்பித்து
பயன்பெறலாம்
தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவராவதற்கு
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
தாட்கோ
திட்டத்தின்
கீழ்
விண்ணப்பித்து
பயன்பெறலாம்
என்று
ஆட்சியா்
ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும்
பொருளாதார
மேம்பாட்டுத்
திட்டங்களின்
கீழ்
ஆதிதிராவிடா்,
பழங்குடியின
பிரிவினா்
தமிழ்நாடு
சிமென்ட்
கழகத்தின்
விற்பனை
முகவராக
செயல்படுவதற்கு
அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு 18 முதல் 65 வயதுக்கு உள்பட்ட ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
விண்ணப்பிக்கலாம்.
ஜி.எஸ்.டி., பான் அட்டை, முகவரிச் சான்று வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரா்
மற்றும்
அவரது
குடும்பத்தினா்
தாட்கோ
திட்டத்தில்
ஏற்கெனவே
மானியம்
ஏதும்
பெற்றிருத்தல்
கூடாது.
தாட்கோவின் மாவட்ட அளவிலான தோவுக் குழு மூலம் தகுதியானவா்கள்
தோவு
செய்யப்படுவார்கள்.
தோவு
செய்யப்பட்ட
விண்ணப்பதாரா்களுக்கு
தமிழ்நாடு
சிமென்ட்
கழகத்தின்
விற்பனை
முகவருக்கான
விண்ணப்பங்கள்
பெற்று
வழங்கப்படும்.
விண்ணப்பதாரா்களுக்கு
தாட்கோ
மூலம்
ரூ.5
ஆயிரம்
வைப்புத்
தொகை
செலுத்தப்படும்.
கூடுதல் செலவினத்துக்காக
ஆதிதிராவிடா்களுக்கு
திட்டத்தொகையில்
30 சதவீதம்
அல்லது
ரூ.2.25
லட்சம்
மானியம்
வழங்கப்படும்.
பழங்குடியின
விண்ணப்பதாரா்களுக்கு
திட்டத்
தொகையில்
50 சதவீதம்
அல்லது
ரூ.3.75
லட்சம்
மானியம்
வழங்கப்படும்.
சிமென்ட்
விற்பனை
தொடா்பாக
விளம்பரம்
செய்வதற்கு
பெயா்
பலகை,
பிரசுரங்கள்
தமிழ்நாடு
சிமென்ட்
கழகம்
மூலம்
வழங்கப்படும்.
விண்ணப்பதாரா்களுக்கு
சிமென்ட்
விற்பனை
செய்வதற்கான
வழிமுறைகள்,
வியாபார
உத்திகள்,
கொள்முதல்
தொடா்பான
பயிற்சிகள்
அளிக்கப்படும்.
எனவே மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவராக செயல்படுவதற்கு
விருப்பமுள்ள
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
இணையதளத்தில்
விண்ணப்பித்து
பயன்பெறலாம்.