TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
கல்பனா சாவ்லா
விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழகத்தில் ஆண்டுதோறும் துணிவு, திறமை
மற்றும் வீர சாகசச்
செயல்களை பாராட்டி சுதந்திர
தின விழாவின் போது
கல்பனா சாவ்லா விருது
வழங்கப்படும். இந்த
விருதை தமிழக முதல்வர்
அவர்கள் உரிய நபருக்கு
வழங்குவார். இந்த விருதுடன்
சேர்த்து 5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும். பெண்கள்
மட்டுமே இந்த விருது
பெற தகுதியுடையவர்கள். இந்த
விருது பெண்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் உயிரைக் காப்பாற்றுவது, சமூகத்தில் இக்கட்டான நேரத்தில் துரிதமாக
செயல்பட்டு மற்றவர்களுக்கு உதவுவது,
விபத்தில் சிக்கியவர்களை மீட்பது,
பொதுமக்களைக் காக்க,
சமூக அக்கறையுடன் செயல்படுவது ஆகிய வீரதீரச் செயல்
செய்தவர்களை கவுரவித்து அங்கீகாரம் அளிக்கும் வகையில் தமிழக
அரசால் வீர தீரச்
செயல்களுக்கான விருது
ஆண்டுதோறும் பணமுடிப்புடன் வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான கல்பனா
சாவ்லா விருது பெற
தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக
அரசு அறிவித்துள்ளது.
இதற்கு
விண்ணப்பிக்க விரும்பும் நபர், விரிவான தன்விவரக்
குறிப்பு, உரிய விவரங்கள்
மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட
ஆட்சித் தலைவர் மூலமாகவோ
அல்லது https://awards.tn.gov.in/
என்ற இணையதளம்
மூலமாகவோ அரசுச் செயலாளர்,
பொதுத்துறை, தலைமைச் செயலகம்,
சென்னை-600 009 அவர்களுக்கு ஜூன் 30 ஆம் தேதிக்கு
முன்பாக அனுப்பி வைக்க
வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். அரசால்
நியமிக்கப்பட்ட தேர்வுக்
குழுவால் விருது பெற
தகுதியுடையோர் தேர்வு
செய்யப்படுவர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


