
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நாட்டுப்புறக் கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நாட்டுப்புறக் கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு நாட்டுபுறக் கலைகளை மேம்படுத்தும் வகையில் பகுதிநேர நாட்டுப்புறக் கலை பயிற்சி மையங்களை தோற்றுவித்துள்ளது.
அதன்படி, கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நண்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை துடும்பாட்டம், ஜிக்காட்டம், வள்ளிக்கும்மி, காவடியாட்டம் போன்ற கலைகளைப் பயிலுவதற்காக ஓராண்டு சான்றிதழ் படிப்புத் தொடங்கப்பட்டுள்ளது.
இக்கலைப் பயிற்சி படிப்புகளில் சேர பத்தாம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 17 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.
இதற்கான கல்விக் கட்டணமாக ரூ.500 பெறப்படுகின்றது. தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை, கவின்கலை பல்கலைக்கழகத்தின் மூலம் இக்கலைப் பயிற்சிகளுக்கான தோவுகள் நடத்தப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை கோவை, மலுமிச்சம்பட்டியில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2611196 அல்லது 90805-78408 ஆகிய எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

