UPSC மாதிரி நுழைவுத்தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசால் அறிவிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை தமிழக அரசு ஏற்றி நடத்தி வருகிறது.
இவர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இனவாரியாகவும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த ஆர்வலர்கள் பயனடையும் வகையிலும் இப்பயிற்சி மையம் கடந்த 57 ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இப்பயிற்சி மையத்தில் 2023ல் முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி பெற்ற 149 தேர்வர்களில், 15 மகளிர் மற்றும் 22 ஆண்கள் என மொத்தம் 37 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில், 5 ஆர்வலர்கள் தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்தவர்கள். அதிகபட்சமாக 6 ஆர்வலர்கள் புவியியல் பாடத்தை தேர்வு செய்தவர்கள். இவர்களுக்கு, 2023 ஜூன் 23ம் தேதி முதல் செப்டம்பர் 24 ம்தேதி வரை உண்டு உறைவிடத்துடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்வினை சிறந்த முறையில் எழுதுவதற்கு பயிற்சி மையத்திலிருந்து, தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்புப் பேருந்து வசதியும் செய்து தரப்படுகிறது. ஊக்கத் தொகையாக நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்வர் ஒருவருக்கு தலா ரூ.25,000/- வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, இம்மையத்தில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு இப்பயிற்சி மையத்தில் ஆளுமைத் தேர்வு பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்கள், தலை சிறந்த வல்லுநர்களாலும் நடத்தப்பட உள்ளது.
இது, தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது மாதிரி ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள வேண்டும். இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தவிர, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த பிற தேர்வர்களும், இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர்.
இதற்காக தனிக்கட்டணம் கிடையாது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9345766957 என்ற புலன் எண்ணிற்கோ (வாட்ஸ்-அப்) அல்லது 044-24621475 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல்களை அளிக்கலாம்.
மாதிரி ஆளுமைத் தேர்விற்கான தேதி குறித்த விவரங்கள். இம்மையத்தின் www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கலந்து கொண்டு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு டெல்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வுக்குச் பயணச் செலவுத் தொகையாக ரூ.5,000/- ஆண்டு சென்றுவர தோறும் இம்மையத்தால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow