ஏப்ரல் 25 முதல்
இலவச நீட் பயிற்சி
வகுப்புகள் தொடக்கம் – பள்ளிக்
கல்வித்துறை
நீட்
என்பது தேசிய தகுதி
மற்றும் நுழைவு சோதனை.
இந்தியாவில் இளங்கலை மற்றும்
பல் மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு நீட் தேர்வு
நடத்தப்படுகிறது. நீட்
தேர்வுகள் மத்திய அரசின்
கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் படி நடத்தப்படுகிறது. இதனால் தமிழக கல்வி
வாரியத்தின் பாடத்திட்டத்தில் படித்த
மாணவர்கள் பாதிப்படையும் சூழல்
வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில்
இலவச நீட் தேர்வு
பயிற்சி அரசு பள்ளி
மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழக
அரசு தமிழ் வழியில்
படித்த மாணவர்களுக்கு மருத்துவ
கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. அரசு பள்ளியில் படித்த
மாணவ, மாணவிகள் நீட்
தேர்வுகள் எழுதுவதற்கு இலவச
பயிற்சி வழங்குவதற்கு தகுதியான
மாணவர்களை தேர்வு செய்து
பயிற்சி வழங்குகிறது. இந்த
பயிற்சி வகுப்புகள் அரசு
சார்பில் ஆன்லைன் முறையில்
கற்பிக்கப்படுகிறது. நடப்பு
கல்வி ஆண்டில் சுமார்
5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்
இலவச பயிற்சி வகுப்பில்
கலந்து கொண்டு வருகின்றனர்.
நடப்பு
கல்வி ஆண்டில் 12ம்
வகுப்பு பொதுத்தேர்வுகள் மே
5ம் தேதி நடக்க
இருந்த காரணத்தால் இலவச
நீட் பயிற்சி வகுப்புகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு
இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா
தொற்றின் பரவல் காரணமாக
12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால்
மீண்டும் ஏப்ரல் 25ம்
தேதி முதல் இலவச
நீட் பயிற்சியை தொடங்க
வேண்டும் என்று பள்ளிக்
கல்வித்துறை அலுவலர்கள் & பள்ளி
தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


