HomeBlogGOOGLE PAY (GPay) – புதிய வசதி அறிமுகம்

GOOGLE PAY (GPay) – புதிய வசதி அறிமுகம்

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

GOOGLE
PAY
(GPay)
புதிய வசதி அறிமுகம்

வளர்ந்து
வரும் தொழில்நுட்பத்தின் காரணத்தினால் நாம் இருந்த இடத்திலிருந்தே பல தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, முன்னதாக
நாம் ஒரு வங்கியில்
பணத்தை செலுத்துவதற்காகவோ, எடுப்பதற்காகவோ அல்லது பரிமாற்றம் செய்வதற்காகவோ வங்கிகளில் நீண்ட நேரம்
காத்திருக்க கூடிய சூழல்
இருந்தது. ஆனால் இத்தகைய
சேவைகள் எல்லாம் தற்போது
நம் கையிலிருக்கும் ஒரு
மொபைல் மூலமாக எளிதாகி
விட்டது. இது மாத்திரம்
அல்ல, மொபைல் ரீசார்ஜ்,
ஆன்லைன் புக்கிங், EB பில்
போன்ற பல சேவைகளை
GOOGLE PAY செயலி
வழங்கி வருகிறது.

அந்த
வகையில் இந்தியாவில் பண
பரிமாற்றம் செய்வதற்கு முதன்மையான சேவையாக GOOGLE
PAY
இருந்து வருகிறது. இந்தியாவின் பேமண்ட் செயலிகள் பிரிவிலும் இந்த GOOGLE
PAY
முன்னணி தளமாக இருக்கிறது. இந்நிலையில் GOOGLE
PAY
செயலியில், சர்வதேச பண
பரிமாற்றம் என்ற புதிய
வசதி தற்போது வழங்கப்பட
உள்ளது. இதன் முதல்
கட்டமாக GOOGLE
PAY
மூலம் அமெரிக்காவில் இருந்து
இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பண
பரிமாற்றம் செய்ய முடியும்.

அதாவது
சுருங்க கூறின், GOOGLE PAY செயலியில் சர்வதேச
பண பரிமாற்ற வசதி
மிக எளிமையான வழிமுறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக GOOGLE
PAY
செயலியில் உள்ள Pay என்ற
ஆப்ஷனில் Western Union அல்லது
Wise
போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை
தேர்வு செய்ய வேண்டும்.
இதன் பின்பாக அடுத்தடுத்த வழிமுறைகளை பின்பற்றி மிக
எளிமையாக சர்வதேச பண
பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

இதில்
அறிமுக சலுகையாக Western Union சேவையில்,
அன்லிமிடெட் பரிமாற்றங்கள் வழங்கப்படுகிறது. அதாவது இந்த GOOGLE PAY செயலி மூலம்
வெளி நாடுகளுக்கு எவ்வளவு
பணம் வேண்டுமானாலும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து
GOOGLE PAY Wise சேவையில்
முதல் பரிமாற்றம் இலவசமாக
வழங்கப்படுகிறது. இந்த
புதிய அறிமுகமான சர்வதேச
பண பரிமாற்ற சேவை,
அமெரிக்க பயனாளர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து
இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக GOOGLE PAY சேவை
உலகின் 200 நாடுகளுக்கு நீட்டிக்கப்பட இருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular